சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு, ஆயுள்வேத திணைக்களம் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் இணைந்து நடாத்திய சர்வதேச யோகா தின நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (01) கோபாலபுரம் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையில் இடம்பெற்றது.
கோபாலபுரம் மாவட்ட ஆயுள்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் என்.நிரஞ்சன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வைத்தியர்கள், பயிற்சி வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர்களுக்கான சான்றிதழ்களை வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் என்.நிரஞ்சன் வழங்கி வைத்தார்.
வைத்திய கலாநிதி பொல்ரன் றஜீவ், வைத்தியர்களான திருமதி வை.ராமநாதன், எம்.ஏ.சி.பி.நிலுபா ஆகியோர் கலந்துகொண்டனர்.