இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் ஜோடி ஆகியோர் முதல் நாளில் சதங்களை அடித்து வரலாறு படைத்துள்ளனர்.
அவர்களின் சிறப்பான ஆட்டத்தின் மூலம், இந்திய கிரிக்கெட் அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெற்களை இழந்து 359 ஓட்டங்கள் எடுத்தது ஆட்டக்காரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 101 ரன்களும், கே.எல்.ராகுல் 42 ஓட்டங்களும் எடுத்தனர்.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஷுப்மன் கில் ஆகியோர் இந்த போட்டியின் முதல் நாளில் சதங்களை பதிவு செய்த மூன்றாவது இந்திய ஜோடி என்ற பெருமையை பெற்றுள்ளது.
எட்டு ஆண்டுகளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் நாளில் இரண்டு இந்திய வீரர்கள் சதமடிப்பது இதுவே முதல்முறையாகும்.
2001 ஆம் ஆண்டு ப்ளூம்ஃபோன்டைனில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்டின் போது சச்சின் டெண்டுல்கர் ,வீரேந்தர் சேவாக் ஆகியோர் முதல் முறையாக இந்த சாதனையை இந்திய அணிக்காக செய்தனர்.
2017 ஆம் ஆண்டில், ஷிகர் தவான், சேதேஷ்வர் புஜாரா இலங்கைக்கு எதிராக இந்த சாதனையைச் செய்த இரண்டாவது ஜோடி என்ற சிறப்பைப் பெற்றனர்.
இவர்களின் வரிசையில் தற்போது ஜெய்ஸ்வால்-கில் ஜோடி இணைந்துள்ளது.
Trending
- அரசவங்கி ஊழியர்களின் ஒன்றினைந்த தொழிற்சங்கம் மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்
- சமூக செயற்பாட்டாளர் கேரள கஞ்சாவுடன் கைது
- 62ஆயிரம் இளைஞர்கள் அரச சேவையில் இணைப்பு
- நேபாளத்திலுள்ள 97 மலைச் சிகரங்களில் இலவசமாக ஏறும் வாய்ப்பு
- எரிபொருளுக்கான வரியை நீக்க முடியாது : வலுசக்தி அமைச்சர்
- மீகொட துப்பாக்கிச் சூட்டில் முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் பலி
- பிரியந்த வீரசூரியவை ஐஜிபியாக அங்கீகரித்தது அரசியலமைப்பு சபை
- அமைச்சர் அருணா ஜெயசேகரவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்ப்பிப்பு