Thursday, June 19, 2025 10:10 am
இன்று (19) நள்ளிரவு முதல் தொடங்க திட்டமிடப்பட்டிருந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்த இலங்கை ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
பதவி உயர்வுகளில் தாமதம் உள்ளிட்ட பல பிரச்சினைகளை காரணம் காட்டி, இன்று (19) நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக இலங்கை ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் முன்னர் அறிவித்திருந்தது.வேலைநிறுத்தத்தை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்க தொழிற்சங்கம் முடிவு செய்துள்ளது.

