Thursday, June 5, 2025 5:45 pm
தெற்கு இஸ்ரேல் மீது ஒக்டோபர் 7, 2023 அன்று ஹமாஸ் நடத்திய தாக்குதலின் போது பணயக்கைதிகளாகப் பிடிக்கப்பட்ட இரண்டு அமெரிக்க-இஸ்ரேலிய குடிமக்களான ஜூடி வெய்ன்ஸ்டீன்-ஹக்காய் (70) ,அவரது கணவர் காட் ஹக்காய் (72) ஆகியோரின் உடல்களை இஸ்ரேலிய இராணுவம் மீட்டுள்ளது.
கிப்புட்ஸ் நிர் ஓஸ் மீதான தாக்குதலின் போது முஜாஹிதீன் படைப்பிரிவு துப்பாக்கிதாரிகளால் இந்த ஜோடி கொல்லப்பட்டது.
அவர்களின் உடல்கள் காசாவின் கான் யூனிஸ் பகுதியில் இருந்து மீட்கப்பட்டு தடயவியல் அடையாளத்திற்காக இஸ்ரேலுக்கு திருப்பி அனுப்பப்பட்டன.
ஹமாஸின் பிடியில் இன்னும் 56 பணயக்கைதிகள் உள்ளனர். இவர்களில் பாதிக்கும் குறைவானவர்கள் உயிருடன் இருப்பதாக நம்பப்படுகிறது.
மீதமுள்ள அனைத்து பணயக்கைதிகளையும் திரும்பப் பெறுவதற்காக ஹமாஸுடன் ஒரு புதிய போர்நிறுத்தத்தை பேச்சுவார்த்தை நடத்துமாறு பணயக்கைதிகள் , காணாமல் போன குடும்பங்கள் மன்றம் ஆகியன அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளது.