326 பயணிகளுடன் துபாயிலிருந்து ‘எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்’ விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தது.சென்னையில் விமான நிலையத்தில் தரை இறங்குவதற்காக, விமானம் தாழ்வாகப் பறந்து கொண்டிருந்தது.அப்போது பரங்கிமலை பகுதியிலிருந்து, பச்சை நிறத்தில் சக்தி வாய்ந்த லேசர் லைட் ஒளி, விமானத்தின் மீது அடிக்கப்பட்டது. இதனால் பதறிய விமானி அடுத்த சில வினாடிகளில் விமானத்தை மேலும் உயரத்தில் பறக்கச் செய்தார்.உடனே, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கும் அவசரமாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
பின் ரேடர் கருவியினால், அந்த ஒளி எங்கிருந்து வந்தது என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சில வினாடிகளில் அந்த ஒளி நின்று விட்டது. இதனையடுத்து விமான நிலைய கட்டுப்பாட்டு அறை விமானம் தரையிறங்க அனுமதி அளித்து தரையிறக்கப்பட்டது.இது தொடர்பாக விமான கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.அதன் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.