இலங்கையில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் சிசிரிவி பொருத்தப்பட வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
விசேடமாக பொலிஸ் நிலையங்களில் உள்ள சிறைக்கூண்டுகளில் சிசிரிவி பொருத்தப்பட வேண்டும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் கைதுசெய்யப்படும் சந்தேக நபர்கள் பொலிஸ் நிலையங்களின் சிறைக்கூண்டுகளில் உயிரிழக்கும் சம்பவங்கள் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகின்றன.
இதனை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.