உணவுப் பற்றக்குறையால் காஸாவில் உள்ள குழந்தைகளும், மக்களும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். உணவை ஒரு ஆயுதமாக இஸ்ரேல் பாவிக்கிறது.
வடக்கு காசாவில் உள்ள ரன்டிசி மருத்துவமனையில் ஆயா எனும் 3 மாத குழந்தை மெலிந்து ஆபத்தான நிலையில் உள்ளது.
மெலிந்த, வெளிறிய முகத்தில் அவளுடைய கன்ன எலும்புகள் வெளியேறி உள்ளன, கண் குழி விழுந்துள்ளது. தோல் நீண்டுள்ளது. அந்த உடலுக்குரிய உடை இல்லை.
19 வயது மட்டுமே ஆன அவரது தாயார் சுந்துஷ், தாய்ப்பால் போதியளவு சுரப்பதில்லை. போதுமான உணவு இலாமையால் பால் பற்றாக்குறையாக உள்ளது.