ஜேர்மனியின் ஹாம்பர்க் ரயில் நிலையத்தில்வெள்ளிக்கிழமை மாலை பெண் ஒருவர் கத்தியால் குத்தியதில் குறைந்தது 18 பேர் காயமடைந்தனர்.
நான்கு பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர், மேலும் ஆறு பேர் படுகாயமடைந்துள்ளதாக பில்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
இருப்பினும், ஹாம்பர்க் காவல்துறை சமூக ஊடக தளமான X-இல் இன்னும் “சரியான புள்ளிவிவரங்கள்” கிடைக்கவில்லை என்று கூறியது.
ஆனால் பலர் உயிருக்கு ஆபத்தான காயங்களுக்கு ஆளாகியுள்ளனர் என்பதை உறுதிப்படுத்தியது.
தாக்குதல் நடத்திய 36 வயதுப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.