Saturday, May 24, 2025 7:26 am
அமெரிக்காவின் ஹர்வர்ட் பல்கலைக்கழகத்திற்கு, வெளிநாட்டு மாணவர்களைச் சேர்ப்பதற்குத் தடை விதித்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முடிவுக்கு எதிராக ஹர்வர்ட் பல்கலைக்கழகம் வெள்ளிக்கிழமை வழக்குத் தொடர்ந்தது.
ட்ரம்பின் உத்தரவு அமெரிக்க அரசியலமைப்பு, பிற சட்டங்களின் “அப்பட்டமான மீறல்” என்று கூறி, ஹர்வர்ட் பல்கலைக்கழகம் பாஸ்டன் கூட்டாட்சி நீதிமன்றத்தில் புகார் அளித்தது.
ட்ரம்பின் அறிவிப்பால் விஸா வைத்திருக்கும் 7,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாடத்திட்டம், சேர்க்கை நடைமுறைகள் , பணியமர்த்தல் கொள்கைகளை மாற்ற முயற்சித்ததற்காக பல்கலைக்கழகம் கடந்த மாதம் வழக்குத் தொடர்ந்த பிறகு இது ட்ரம்ப் நிர்வாகத்தின் எதிரானஇரண்டாவது வழக்கு.

