இலங்கை சிவசேனை தலைவர் மறவன் புலவு சச்சு தானந்தாவின் எற்பாட்டில் யாழ்ப்பாண இராச்சியத்தின் இறுதிச் சைவத் தமிழ் மன்னன் 02 சங்கிலியனின் 406 வது சிராத்ததின நினைவேந்தல் இன்று நல்லூர் சங்கிலியன் தோப்பு முன்றலில் சங்கலியன் மன்னனின் சிலை அருகாமையில் நடைபெற்றது.
யாழ்ப்பாண இந்திய துணை த்தூதரக அதிகாரி எ.நடராஜன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சங்கிலியன் மன்னனின் சிலைக்கு மலர்மாலை அணி வித்ததுடன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்..
மருதார் மட அஞ்சநேயர் தேவ ஸ்தான குருக்கள் சுந்தரேஸ்வரக்குருக்கள் நினைவு பேரூரை நிகழ்த்தினர்..
யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளர் கிருஷ்னேந்திரன்,இலங்கை சிவசேனை அமைப்பின் உறுப்பினர் கள்,பேராசிரியர் ம.தேவராஜா, சமயத் தலைவகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.