பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க இன்று (19) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அரச நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டார்.
01 மில்லியன் ரூபாய் நிதி மோசடி தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தலா 01 மில்லியன் ரூபாய் இரண்டு தனிப்பட்ட பிணைகளில் பதுளை நீதிவான் நீதிமன்றம் விடுத்துள்ளது.