மெலனியா ட்ரம்ப்பின் சொந்த ஊரான ஸ்லோவேனியாவில் அமைக்கப்பட்ட முதல் சிலை தீயில் எரிந்து நாசமானது , தற்போது அதற்கு மாற்றாக வைக்கப்பட்டிருந்த வெண்கலச் சிலை காணாமல் போனது. பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
அமெரிக்க முதல் பெண்மணியின் முழு அளவிலான வெண்கலச் சிலை, 2020 ஆம் ஆண்டில் அவரது சொந்த ஊரான செவ்னிகா அருகே திறக்கப்பட்டது , இது ஒரு மரத்தின் அடிப்பகுதியில் உள்ள வயல்வெளியில் உயர்ந்து நின்றது, முந்தைய மரச் சிலை தீ வைத்து அழிக்கப்பட்டது. பின்னர் வெண்கலச் சிலை அமைக்கப்பட்டது.
மே 13 ஆம் திகதி பொலிஸில் புகாரளிக்கப்பட்டது, உடனடியாக பொலிஸ் அதிகாரிகள் குற்றம் இடத்துக்குச் சென்று விசாரனையை ஆரம்பித்தனர். கணுக்கால் பகுதியில் துண்டிக்கப்பட்டு சிலை அகற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.