கொத்மலையில் உள்ள கெரண்டியெல்லவில் ஏற்பட்ட பேருந்து விபத்தைத் தொடர்ந்து கம்பளை மற்றும் பேராதனை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோர் நேற்று சென்று பார்வையிட்டனர்.
காயமடைந்தவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை சந்திக்க துணை அமைச்சர் டாக்டர் பிரசன்ன குணசேனவும் இந்த விஜயத்தில் இணைந்தார்.
“ஒரு உயிரை இழந்தாலும் அது ஒரு சோகம் – ஒவ்வொரு நபரும் ஒருவரின் குடும்ப உறுப்பினர்” என்று பிரதமர் அமரசூரிய வருகைக்குப் பிறகு ஊடகங்களுக்குப் பேட்டியளித்தார்.
மோட்டார் விபத்துக்கள் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து உயிர்களைக் காவுகொள்கின்றன இது ஒரு பிரச்சினையாக மாறி வருவதை நாங்கள் அங்கீகரிக்கிறோம்” என்று அவர் மேலும்; கூறினார்.
மருத்துவ மற்றும் அவசரகால ஊழியர்களுக்கு நன்றியையும் தெரிவித்தார்.