2025 ஆம் ஆண்டில் இலங்கையில் 19,000 க்கும் மேற்பட்டவர்கள் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டு இதுவரை இலங்கையில் 19,215 டெங்கு நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு (NDCU) தெரிவித்துள்ளது.
ஏப்ரல் மாதத்தில் அதிகபட்சமாக 5,175 பேரும், மே மாதத்தின் முதல் 10 நாட்களில் 1,669 டெங்கால் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை ,கண்டி உள்ளிட்ட பத்து மாவட்டங்கள் அதிக ஆபத்துள்ள மண்டலங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
நோய் பரவுவதைத் தடுக்க நுளம்பு இனப்பெருக்கம் செய்யும் இடங்களை அகற்றுமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களை வலியுறுத்துகின்றனர்.