இஸ்ரேலின் ஜெருசலேமுக்கு அருகிலுள்ள எஸ்தாவோல் காட்டில் உள்ள ஒரு பெரிய புதர் காடு நேற்று (30) மதியம் தீப்பிடித்தது.
இதனால் இஸ்ரேலில் உள்ள வனப்பகுதியில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காட்டுத்தீயினால் குறைந்தது 13 பேர் காயமடைந்ததுடன் உயிரிழப்புக்கள் தொடர்பில் எந்தவிதமான தகவலும் வெளியாகவில்லை.
தீப்பரவல் ஏற்பட்டுள்ள பகுதியில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தீயணைப்பு வாகனங்கள், உலங்கு வானூர்திகள் என்பன தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் பலத்த காற்று வீசியதால், தீயை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாக இருந்தது.
அந்தப் பகுதியில் உள்ள பல வீதிகளும் போக்குவரத்துக்காக மூடப்பட்டுள்ளன.