இந்தியாவின் ஜம்மு – காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட மக்களுக்கு யாழில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்தியாவின் காஷ்மீரில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பயங்கரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 26 அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டிருந்தனர்.
இதன் போது உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் யாழிலுள்ள இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் நேற்று இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.
இந்த அஞ்சலி நிகழ்வில் இந்தியத் துணைத் தூதுவர் சாய்முரளி, வடக்கு மாகாண ஆளுநர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் மதத் தலைவர்கள் பொது மக்கள் எனப் பல தரப்பினரும் பங்குபற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.