தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு விலங்கு பரிமாற்ற திட்டத்தின் கீழ் பல புதிய விலங்குகள் வரவுள்ளன.
தேசிய விலங்கியல் துறையின் இயக்குநர் ஜெனரல் சந்தன ராஜபக்ஷ, ஊடகங்களுக்கு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்துள்ளார்.
விலங்குகள் மூன்று வரிக்குதிரைகள்இ இரண்டு ஜோடி ஒட்டகச்சிவிங்கிகள், பிரான்சிலிருந்து வந்த மூன்று அனகொண்டாக்கள், மாண்டரின் வாத்துகள் மற்றும் இரண்டு பெரிய ஆமைகள் என்று பல புதிய விலங்குகள் வரவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் உள்ள உயிரினங்களின் பன்முகத்தன்மையை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட பரிமாற்ற திட்டத்தின் கீழ் இந்த விலங்குகள் தொடர்புடைய நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சந்தன ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.