கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மோட்டார் போக்குவரத்து மற்றும் பயணிகள் போக்குவரத்து, கட்டிடங்கள் மற்றும் நிர்மாணம், வீடமைப்பு, கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கள் அமைச்சின் செயலாளராக கடமையாற்ற வந்த எம்.எம்.நஸீரின் சேவையை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு
கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சில் நடை பெற்றது.
இந்த பிரியாவிடை நிகழ்வில் கிழக்கு மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்கள மாகாண ஆணையாளர் திருமதி த.வருணி உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள் திணைக்களத் தலைவர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் பங்கேற்று ஓய்வு பெற்றுச் செல்லும் செயலாளர் எம்.எம்.நஸீருக்கு பொன்னாடை போர்த்தி, நினைவுச்சின்ன, வாழ்துமடல் பரிசுப் பொருட்களை வழங்கினார்கள்.
தனது 60 வயதை பூர்த்தி செய்து ஓய்வு பெற்றுச் செல்லும் இவர், கிழக்கு மாகாணத்தில் மாகாண விவசாய, கூட்டுறவு அமைச்சின் செயலாளராகவும், பேரவைச் செயலக செயலாளராகவும், பிரதிப் பிரதம செயலாளர் (நிருவாகம்) போன்ற பதவிகளை வகித்தார்.