இந்தியா வம்சாவளியை சேர்ந்த பெண் நீலா ராஜேந்திரன், நாசாவில் முக்கிய பொறுப்பில் பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில், அவர் திடீரென பணி நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவி ஏற்றதிலிருந்து, பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
குறிப்பாக, தேவையற்ற செலவுகளை குறைக்கவும், நிர்வாகத்தை சீர்படுத்தவும் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
மேலும், எலான் மஸ்க் தலைமையிலான குழுவொன்றை நிர்வாகத்தை சீர்படுத்தும் நோக்கில் ட்ரம்ப் அரசு அமைத்துள்ளது.
அந்த குழுவின் பரிந்துரைப்படி சில துறைகள் மூடப்பட்டன.
மேலும் பல அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.