உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பில் களமிறங்கியுள்ள
சம்மாந்துறை வேட்பாளர்களில் சிலர், நாபீர்பவு ண்டேசனின் மாம்பழச் சின்ன சுயேட்சை அணியுடம் இணைந்து செயற்படுவதற்கான முஸ்தீபுகள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சம்மாந்துறை பிரதேச சபை சார்பாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் களமிறக்கப்பட்டுள்ள வேட்பாளர்களுக்கும், அப்பிரதேச அமைப்பாளருக்குமிடையில் இடம்பெற்ற கருத்து முறன்பாடுகள் காரணமாக முக்கிய நான்கு வட்டாரங்களின் வேட்பாளர்கள் மாம்பழச் சின்ன சுயேட்சை குழுவுடன் இணைய உள்ளனர்.