Thursday, April 10, 2025 3:24 am
படலந்த ஆணைக்குழு அறிக்கை மீதான விவாதம் இன்று பாராளுமன்றத்தில் (10) இடம்பெறவுள்ளது.
முற்பகல் 11.30 முதல் மாலை 5.30 வரையில் இந்த விவாதம் நடைபெறவுள்ளது.
மே மாதத்தில் மற்றொரு நாளை இரண்டாவது நாளாக விவாதத்திற்கு பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
படலந்த ஆணைக்குழு அறிக்கை கடந்த 14 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்றைய பாராளுமன்ற அமர்வுக்கு பின்னர், அடுத்த பாராளுமன்ற அமர்வு மே மாதம் 8ஆம் திகதி இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

