சமீபத்தில் காலமான பாராளுமன்ற உறுப்பினர் கோசல நுவன் ஜெயவீரவின் உடலுக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இறுதி அஞ்சலி செலுத்தினார்.
தேசிய மக்கள் சக்தி (NPP) கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (06) தனது 38வது வயதில் காலமானார்.
திடீரென மாரடைப்பால் கரவனெல்ல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிறிது நேரத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
நேற்று மறைந்த பாராளுமன்ற உறுப்பினரின் இறுதிச் சடங்கில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கலந்து கொண்டார்.
அங்கு அவர் கோசல நுவன் ஜெயவீரவின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.