கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 27 ஆம் திகதி மூன்று ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக கைது செய்யப்பட்ட இவர் கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு இரண்டு குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டு, ஒரு ஊழல் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இந்நிலையில் இன்று ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு ஆணையத்தால் தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு வழக்கு தொடர்பாக பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை இந்த மாதம் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதுளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.