காலியில் உள்ள பூஸ்ஸா சிறைச்சாலையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதியை சக கைதி ஒருவர் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.
சிறையில் சமீபத்தில் நடந்த சோதனை அல்லது போதைப்பொருள் தொடர்பான மோதல் இந்த மரணத்திற்கு காரணம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.