கட்டுநாயக்கா விமான நிலையத்தில் 100 மில்லியனுக்கும் அதிகமான மதிப்பினைக் கொண்ட புதிய மொபைல் போன்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கைக்கு இன்று (4) வந்தடைந்த சந்தேக நபரை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்தனர்.
மட்டக்களப்பு காத்தான்குடியில் வசிக்கும் 32 வயதான சந்தேக நபர், பல மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள ஹோட்டல்களில் பணிபுரிந்து வருகிறார்.
அவர் அடிக்கடி இலங்கைக்குள் பொருட்களை கடத்தும் நபர் என சுங்க அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.
சந்தேக நபர் இன்று அதிகாலை 528 மொபைல் போன்கள் கொண்ட மூன்று பைகளுடன் துபாயிலிருந்து வந்துள்ளார்.