ஜப்பானின் கியூஷு பகுதியில் 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
கியூஷுவை மையமாகக் கொண்டு ஜப்பான் நேரப்படி நேற்று இரவு 7.34 மணிக்கு 30 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
நாகசாகியின் தென்கிழக்கே சுமார் 283 கி.மீ தொலைவில் உள்ள இந்தப் பகுதியில் இருந்து எந்த சேதமும் ஏற்படவில்லை.
மேலும் இந்த நேரத்தில் சுனாமி எச்சரிக்கை எதுவும் இல்லை.