தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தமிழக சட்டசபையில் கச்சத்தீவை மீண்டும் திரும்ப பெறுவதற்கான அரசின் தனிப்பட்ட தீர்மானத்தை சமர்ப்பித்துள்ளார்.
தமிழ்நாடு மீனவர்களின் அனைத்து இன்னல்களை போக்க கச்சத் தீவை மீண்டும் பெறுவதே நிரந்தர தீர்வாக அமையும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளார்.
இலங்கைக்கு உத்தியோகபூர்வமாக விஜயம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, இலங்கை அரசுடன் பேசி, அந்நாட்டு சிறையில் வாடும் நமது மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுதலை செய்து மீட்டு கொண்டுவர வேண்டுமென்றும் இந்த பேரவையில் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.