Monday, December 15, 2025 4:29 pm
கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட “முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய செயற்பாட்டின் போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 981 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 987 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன்போது , 890 கிராம் ஐஸ் போதைப்பொருளும் , 27 கிலோ 089 கிராம் கஞ்சா போதைப்பொருளும் , 35349 கஞ்சா செடிகளும் , 21 கிலோ 006 கிராம் குஷ் போதைப்பொருளும் , 567 கிராம் மாவா , 002 கிராம் ஹசீஸ் போதைப்பொருளும் , 513 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் , 1806 போதை மாத்திரைகளும் , 193 கிராம் கொக்கேயின் போதைப்பொருளும் , 98 கிராம் 530 மில்லிகிராம் மதனமோதக மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும் , கைதுசெய்யப்பட்டவர்களில் 12 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

