வியாழன் பெயர்ச்சி: வியாழன் கிரகமானது வக்ர பெயர்ச்சியடைவதால் சில ராசிக்காரர்கள் ராஜயோகத்தை பெறப் போகின்றனர். எந்தெந்த ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்…
ஜோதிட சாஸ்திரத்தின்படி அனைத்து கிரகங்களுமே குறிப்பிட்ட கால இடைவெளியில் இடத்தை மாற்றுகின்றன. குறிப்பிட்ட நேரத்தில் பின்னோக்கி பெயர்ச்சி அடைகின்றன. சூரியன், சந்திரன், ராகு, கேதுவைத் தவிர அனைத்து கிரகங்களுமே பின்னோக்கி பெயர்ச்சி அடையும். 2025 ஆம் ஆண்டில் வியாழன் கிரகம் 84 நாட்களுக்கு பின்னோக்கி வக்ரப் பெயர்ச்சி அடைகிறது.
வியாழனின் இந்த வக்ர பெயர்ச்சியால் அனைத்து ராசிகளும் அதன் தாக்கத்தை நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் பெறும். சில ராசிகளுக்கு வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை அள்ளித் தரும். வியாழன் கிரகம் மங்களகரமான, சுபகிரகமாக பார்க்கப்படுகிறது. இந்த வியாழன் கிரகம் ரிஷப ராசியில் வக்ர பெயர்ச்சி அடையவுள்ளது.
வியாழனின் இந்தப் பெயர்ச்சி சில ராசிகளுக்கு வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது. வியாழ பகவானின் இந்த பெயர்ச்சியால் சில ராசியினர் ராஜயோகம் பெறப் போகின்றனர். எந்த ராசியினர் அதிர்ஷ்டம் பெறப் போகின்றனர் என்று தெரிந்து கொள்ளலாம்.
ரிஷப ராசி: வியாழனின் வக்ர பெயர்ச்சி ரிஷப ராசியினருக்கு பண வரவை உண்டாக்கும். நிதி ஆதாயம் பெறுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும், வாகனம், சொந்த வீடு, சொத்துகள் வாங்கும் யோகம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்துவது நன்மை தரும். வியாபாரம், தொழிலில் லாபம் ஏற்படும். எதிர்பார்த்த பண வரவுகள் வந்து சேரும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள செய்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வாழ்க்கையில் அடுத்த நிலைக்குச் செல்வீர்கள். செல்வங்கள், சொத்துகள் அதிகரிக்கும். சேமிப்பு, முதலீடு லாபகரமானதாக இருக்கும்.
சிம்ம ராசி: வியாழனின் வக்ர பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு வேலை, வியாபாரம், தொழிலில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் சிறப்பான காலமாக இருக்கும். புதிய நம்பிக்கையும், உத்வேகமும் பிறக்கும். உயரிய பதவிகள் உங்களை வந்து சேரும். உங்களுடைய ஆளுமைத் திறன் அதிகரிக்கும். ஆன்மிகம், தெய்வ வழிபாட்டின் மீது நாட்டம் அதிகரிக்கும். மன அமைதி அடைவீர்கள். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி உண்டாகும். திருமணம் தொடர்பான நல்ல செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.
விருச்சிகம்: வியாழனின் இந்த வக்ரப் பெயர்ச்சி உங்களுக்கு செல்வ செழிப்புகளை அள்ளித் தரும். புதிய வருமான ஆதாரங்கள் அதிகரிக்கும். திடீர் பண வரவுகள் உண்டாகும். வருமானம் அதிகரிப்பதால் வாழ்க்கையில் ஒருபடி மேலே செல்வீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். உடநலப் பிரச்னைகள் அனைத்தும் தீரும். வெளிநாட்டுப் பயணம், படிப்பு, வேலை, தொழில் வாய்ப்புகள் உண்டாகும். குடும்பம், நண்பர்களுடனான உறவுகள் வலுப்படும். உங்களுடைய இலக்குகளை நோக்கி கவனத்தை செலுத்துவீர்கள்.
மகரம்: வியாழன் பின்னோக்கி நகருவது மகர ராசியினருக்கு ஏற்றத்தை உண்டாக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். உங்களுக்கான தனி அங்கீகாரம் உருவாகும் காலமாக இருக்கும். வேலையில் பதவி உயர்வு, புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். தொழில், முதலீடுகள், சேமிப்புகளில் லாபம் பெறுவீர்கள். நேரத்தையும், சக்தியையும் சரியான திசையில் செலுத்தினால் வெற்றி காண்பீர்கள். மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். குழந்தைகள் மூலமாக நல்ல செய்திகள் வந்து சேரும். ஆன்மிக பயணங்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
மீனம்: வியாழனின் இந்த வக்ரப் பெயர்ச்சி உங்களுக்கு சிறப்பான காலமாக இருக்கும். செல்வ வளம் உண்டாகும். உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் எதிர்பார்த்த விஷயங்கள் அனைத்தும் கைகூடி வரும். நீண்ட காலமாக வர வேண்டிய பணங்கள் அனைத்தும் வந்து சேரும். திட்டங்களை பிறரிடம் சொல்லாமல் இருப்பது நல்லது. திருமண வாழ்க்கையில் அன்பும், நம்பிக்கையும் பெருகும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த தொடங்குவீர்கள். தன்னம்பிக்கை, தைரியத்தால் வெற்றி பெறுவீர்கள். உடல், மன வலிமை அதிகரிக்கும்.