Saturday, December 20, 2025 9:51 am
நாட்டின் சில பகுதிகளில் இன்று சனிக்கிழமை (20) 8 மணித்தியால அமுல்படுத்தப்பட்டுள்ளது .
கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று சனிக்கிழமை (20) நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
அதன்படி இன்று காலை 8.30 முதல் மாலை 4.30 வரையான 8 மணித்தியாலங்களுக்கு இந்த நீர்வெட்டு அமுலில் இருக்கும் என அந்த சபை அறிவித்துள்ளது.
கொழும்பு 1 முதல் 15 வரையான பகுதிகளிலும் தெஹிவளை , மொரட்டுவை மாதிவெல , நுகேகொடை , நாவல , கொலன்னாவ , கொட்டிகாவத்தை , அங்கொடை , வெல்லம்பிட்டி பொரலஸ்கமுவ , மற்றும் கொடவத்தை , பத்தரமுல்லை , பெலவத்தை , ஹோகந்தர , கொஸ்வத்த , தலவத்துகொட , கோட்டை , இராஜகிரிய , மிரிஹான , மஹரகம ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர்வெட்டு என்பது தவிர்க்க முடியாத ஒரு தேவையாகும். இது மக்களுக்கு குறுகிய கால அசௌகரியத்தை ஏற்படுத்தினாலும், நீண்ட காலத்திற்கு சீரான நீர் விநியோகத்தை உறுதி செய்கிறது .

