உலக சுகாதார அமைப்பின் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது பிராந்திய மாநாடு இன்று திங்கட்கிழமை கொழும்பில் ஆரம்பமாகிறது.
உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய நிறுவனத்தின் பொறுப்பதிகாரி கத்தரினா போஹ்மே, 8 நாடுகளின் பிரதிநிதிகள், அந்த நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் மற்றும் உலக சுகாதார அமைப்பின் நிபுணர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.
மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் அடுத்த ஆண்டிற்கான பிராந்திய சுகாதார நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.