Thursday, November 27, 2025 10:07 am
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் 71ஆவது பிறந்த தினம் இன்று புதன்கிழமை வல்வெட்டித்துறையில் கொண்டாடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் உள்ள அவரது பூர்வீக இல்லத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இதன்போது கேக் வெட்டியும், 71 இனிப்பு மற்றும் மர கன்றுகள், பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்க வழங்கியும் பிறந்த தினத்தை மக்கள் கொண்டாடினர்.

இந்த கொண்டாட்டத்தில் பெருமளவான பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


