Wednesday, January 7, 2026 12:53 pm
மாவனெல்லை மற்றும் குருநாகல் ஆகிய பிரதேசத்தில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது வலம்புரிச் சங்குகள் மற்றும் மாணிக்கக் கற்கள் உள்ளிட்ட பொருட்களுடன் 6 சந்தேநபர்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் திருகோணமலை , நாவலப்பிட்டி , மாவனெல்லை மற்றும் குருநாகல் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

