Saturday, December 6, 2025 9:33 am
கொழும்பு பம்பலப்பிட்டி கடற்கரை வீதியில் இன்று சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஐந்து போ் காயமடைந்து, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளவத்தையில் இருந்து பம்பலப்பிட்டி கடற்கரை வீதியால் சென்று கொண்டிருந்த கனரக லொறி ஒன்று, வீதியின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த, இரண்டு வாகனங்களுடன் மோதியுள்ளது. அதிகாலை 2.30 இற்கு இச் சம்பவம் இடமபெற்றுள்ளது.
வீதியில் நின்ற வாகனங்களில் மோதி பின்னர் அருகில் இருந்த ரயில் தண்டவாளத்தில் கனரக லொறி ஏறி நின்றுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக கனரக வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
வீதியின் அருகில் நின்ற இரண்டு வாகனங்களை மோதிய கனரக வாகனம் அந்த வாகனங்களின் முன்பக்கத்தில் ஏறி மிதித்த பின்னரே, ரயில் தண்டவாளத்தில் வந்து நின்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

