Wednesday, March 11, 2026 12:37 pm
கோயம்புத்தூரில் அமைந்துள்ள அரசுப் பாடசாலை ஒன்றில் 43 மாணவர்கள் உண்ட உணவு விஷம் அடைந்த சம்பவம் நேற்று நிகழ்ந்துள்ளது.
செவ்வாய்க்கிழமை அரசுப் பாடசாலையில் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்ட சிறிது நேரத்திலேயே இந்த சம்பவம் நிகழ்ந்தது. உணவை உட்கொண்ட சிறிது நேரத்திலேயே சில மாணவர்கள் வாந்தி எடுக்கத் தொடங்கினர் மற்றும் வயிற்றில் வலி இருப்பதாக முறைப்பாடு அளித்தனர். அதிகமான மாணவர்கள் முறைப்பாடு அளித்ததால், அவர்கள் சிகிச்சைக்காக அரசு வைத்தியாசலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த ஆண்டு ஜனவரி மாத தொடக்கத்தில் உணவு விஷம் அடைந்ததாக சந்தேகிக்கப்படும் 33 மாணவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

