பிரதமர் நரேந்திர மோடி 42 நாடுகளுக்கு மேல் போயுள்ளார். ஆனால் மணிப்பூருக்குப் போக மட்டும் அவர் மறுக்கிறார் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார்.
கர்நாடகா மாநிலம் மைசூருவில் நடந்த காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டத்தில் கார்கே கலந்து கொண்டு பேசினார். அப்போது பிரதமர் நரேந்திர மோடியையும், பாஜகவையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
கார்கே பேசுகையில், பிரதமர் மோடி 42 நாடுகளுக்கு சென்றுள்ளார். ஆனால் மணிப்பூருக்கு செல்லவில்லை. மணிப்பூரில் ஒரு வருடத்திற்கும் மேலாக கலவரம் நடந்து வருகிறது. மத்திய அரசு இந்த விஷயத்தை சரியாக கையாளவில்லை.
கர்நாடக அரசு நிதி நெருக்கடியில் இருப்பதாக சிலர் கூறுகிறார்கள். காங்கிரஸ் ஆட்சி செய்யும் கர்நாடக அரசு திவாலாகவில்லை. கர்நாடக அரசு நல்ல நிலையில் உள்ளது என்றார் கார்கே.
கார்கே,மணிப்பூ,மோடி,உலகம்,பயணம், இந்தியா,ரெகன்,ஏகன் மீடியா
00000000000000000000000000
தவறான மொழி பெயர்ப்புக்கு மன்னிப்பு கேட்ட டெட்டா
கர்நாடக முதல்வர் சித்தராமையா இறந்துவிட்டதாக தவறாக மொழிபெயர்த்திருந்தது மெட்டா. இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்த முதல்வர் சித்தராமையா, கன்னட மொழிபெயர்ப்பை நிறுத்தும்படி மெட்டாவுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற மெட்டா தளங்களில் கன்னட மொழிபெயர்ப்பு தவறாக இருப்பதால், உண்மை தகவல்கள் திரிக்கப்பட்டு, பயனர்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள் என்றும் அவர் கூறியிருந்தார்.
தற்போது இந்த பிரச்சனை சரி செய்யப்பட்டுவிட்டதாகவும், இந்த தவறுக்கு மன்னிப்பு கேட்பதாகவும் மெட்டா செய்தி தொடர்பாளர் விளக்கியுள்ளார். சமீபத்தில் பழம்பெரும் நடிகை பி.சரோஜாதேவி காலமானார். அவரது மறைவுக்கு சித்தராமையா இரங்கல் செய்தி வெளியிட்டிருந்தார். அந்த பதிவின் மொழிபெயர்ப்பில்தான், முதல்வர் சித்தராமையா இறந்துவிட்டதாக தவறாக இடம் பெற்றிருந்தது.
இது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மெட்டாவின் இந்த தவறான மொழிபெயர்ப்புக்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். முதல்வர் சித்தராமையாவும் தனது சமூக வலைதளத்தில் இதுகுறித்துக் குறிப்பிட்டிருந்தார். சமூக ஊடக தளங்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் குறிப்பாக அதிகாரப்பூர்வ தகவல்களை கையாளும் போது கவனமாக இருக்க வேண்டும் என்றும், இந்த தளங்களில் காட்டப்படும் மொழிபெயர்ப்புகள் பெரும்பாலும் தவறானவை என்பதை மக்கள் உணர வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.