அரசாங்கத்தின் நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் 40,000 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் இருந்து அதிக அளவு நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் மஞ்சுள பின்னலந்த தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தில் அறுவடையில் 85 சதவீதம் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில், அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் நெல் கொள்முதல் நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.
நெல் கொள்முதல் செய்வதற்காக முதல் கட்டமாக அரசாங்கம் 60,000 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.
இதில் 55,000 மில்லியன் ரூபா விவசாயிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் மஞ்சுள பின்னலந்த மேலும் தெரிவித்தார்.