Monday, December 8, 2025 10:13 am
இலங்கைத்தீவில் ஏற்பட்ட டித்வா புயலினால், கண்டி மாவட்டத்தில் வெள்ளம், மண்சரி காரணமாக பாடசாலை மாணவர்கள் 35 பேரும், 10 ஆசிரியர்களும் உயிரிழந்துள்ளதாக மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் நிஹால் அலஹகூன் தெரிவித்துள்ளார்.
உயிரிழப்பு மதிப்பீடுகளின் பிரகாரம், கண்டி மாவட்டத்தில் 97 ஆயிரத்து 850 பாடசாலை மாணவர்களும், மாத்தளை மாவட்டத்தில் 8 ஆயிரத்து 500 மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் எடுத்துக் கூறினார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் நிஹால் அலஹகூன் இவ்வாறு கூறினார்.
உயிாிழந்த மாணவர்கள், ஆசிரியர்களின் குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கப்படும் என்றும், சில மாணவர்களின் குடும்பங்கள் மண்சரிவுக்குள் முழுமையாக சிக்கி உயிாிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எந்தெந்த பாடசாலை மாணவர்கள் கூடுதலாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விபரங்கள் கோரப்பட்டுள்ளது என்றும் கூறிய நிஹால் அலஹகூன், பல பாடசாலைகள் முழுமையாகவும் வேறு சில பாடாசாலைகள் பாகுதியளவிலும் சேதமடைந்துள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.

