Sunday, December 7, 2025 9:29 am
கொழும்பு தெஹிவளை பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய இளைஞர் ஒருவர் இன்று சனிக்கிழமை இரவு 9 மணியளவில் ஏ குவாறிற்ரா் (A Quarters) விளையாட்டு மைதானத்திற்கு முன்பாக துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
அடையாளம் தெரியாத இருவர் இவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டுத் தப்பிச் சென்றதாக தெஹிவளை பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த இளைஞன் கொழும்பு தெற்கு களுபோவில போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிப்பட்டார். ஆனாலும் அவர் உயிரிழந்துவிட்டதாக அங்கு மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இச் சம்பவத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை என்றும் துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற இடத்தில் இருந்து இளைஞர் ஒருவர் தப்பியோடியதாகவும் தெரிவித்த பொலிஸார், அந்த இளைஞனை தேடிவருவதாகவும் தெரிவித்தனர்.
பாதாள உலகக்குழுக்களுடன் தொடர்புடைய சம்பவமாக இருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டனர்.

