சுவிஸ் டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் ஃபெடரர் 2025 ரோலக்ஸ் ஷாங்காய் மாஸ்டர்ஸுக்காக ஷாங்காயில் மீண்டும் களமிறங்க உள்ளார். 2017 ஒற்றையர் பட்டத்தை வென்ற பிறகு கிஷோங் ஸ்டேடியத்தில் அவர் பங்குபெறும் முதல் போட்டியாகும்.
ஒக்டோபர் 10ஆம் திகதி ரோஜர் & பிரண்ட்ஸ் பிரபல இரட்டையர் போட்டியில் நடிகர் வூ லீ, தற்காப்புக் கலை நட்சத்திரம் டோனி யென் ,முன்னாள் இரட்டையர் உலக நம்பர் 3 ஜெங் ஜீ ஆகியோருடன் இணைந்து கண்காட்சி போட்டியில் பங்கேற்பதை ரோஜர் ஃபெடரர் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 10) உறுதிப்படுத்தினார்.
ஒரு விளம்பர வீடியோவில், ரோஜர் ஃபெடரர் தனது உற்சாகத்தை வெளிப்படுத்தினார், ஷாங்காயை மறக்க முடியாத நினைவுகளுடன் கூடிய ஒரு சிறப்பு இடம் என்று குறிப்பிட்டார்.
2025 ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் விளையாட்டுப் போட்டி அக்டோபர் 1 முதல் 12 வரை நடைபெறும். கடந்த ஆண்டு இறுதிப் போட்டியில் நோவக் ஜோகோவிச்சை தோற்கடித்த பிறகு ஜானிக் சின்னர் நடப்பு சாபியனானார். 2022 ஆம் ஆண்டு இலண்டனில் நடந்த லேவர் கோப்பையில் தொழில்முறை டென்னிஸில் இருந்து பெடரர் ஓய்வு பெற்றார்.தனது தொழில்முறை டென்னிஸ் வாழ்க்கையில், ரோஜர் ஃபெடரர் 20 கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டங்களை வென்றார்.
உலக நம்பர் 1 ஆக 310 வாரங்கள் சாதனை படைத்தார், 103 ஏடிபி ஒற்றையர் கோப்பைகளை வென்றார் , 2008 இல் இரட்டையர் பிரிவில் ஒலிம்பிக் தங்கத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.