Thursday, January 22, 2026 2:53 pm
2025 ஆம் ஆண்டில் 23,000 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.
“தேசிய ஒற்றுமைக்கான தேசிய நடவடிக்கையின் முன்னேற்றம்” குறித்து இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில், உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பாதுகாப்புப் படையினரால் முன்னெடுக்கப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் கைப்பற்றல் கடந்த 2025 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது.
2024ஆம் ஆண்டு, 10,871 கிலோகிராம் ஹெரோயின், கஞ்சா, ஐஸ், ஹாஷிஷ் மற்றும் கொக்கய்ன் உள்ளிட்ட போதைப்பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
2025ஆம் ஆண்டு 23,692 கிலோகிராம் 307 கிராம் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டது எனவும், இது முந்தைய வருடத்தை விட மூன்று மடங்கு அதிகரிப்பாகும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.

