Monday, November 10, 2025 10:05 am
17வயது சிறுவன் உட்பட, மொத்தம் 23பேர் போதைப்பொருளுடன் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, இந்த கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
போதை மாத்திரைகளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் 17 வயது சிறுவன் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 10 பேர் ஐஸ் போதைப்பொருளுடனும், 04 பேர் ஹெரோயின் போதைப்பொருளுடனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணப்பகுதியில் போதைப்பொருள் கடத்தல்கள், வன்முறைச்சம்பவங்கள் அண்மையில் அதிகரித்து வரும் நிலையில், இது தொடர்பில் சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என பொதுபாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேயபால அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

