Tuesday, December 9, 2025 2:51 pm
கடற்படையைச் சேர்ந்த பலருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கைக் கடற்படை (Srilanka Navy) இன்றைய தினம் (09) 75 ஆம் ஆண்டு நிறைவை கொண்டாடும் நிலையில் இந்த பதவி உயர்வுகள் வழங்கப்பட்டன.
இலங்கை கடற்படையின் 75வது ஆண்டு நிறைவு விழா , சமூக, சுற்றாடல் மற்றும் நல்லிணக்க திட்டங்களை உள்ளடக்கியதாகவும் , கடற்படை மரபுகள் மற்றும் மத வழிபாடுகளுக்கு முன்னுரிமை அளித்தும் இன்று செவ்வாய்க்கிழமை (09) வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இதனையிட்டு , கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பனாகொடவின் பரிந்துரைக்கமைய , 17 அதிகாரிகள் மற்றும் 2,069 சிரேஷ்ட , கனிஷ்ட மாலுமிகள் என மொத்தம் 2,086 கடற்படை வீரர்களுக்கு அடுத்த தரத்திற்கான பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், கடற்படை ஆரம்பிக்கப்பட்டு 75 ஆண்டுகள் பூர்த்தியானதனை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

