காலநிலை மாற்றம், பேரிடர்களின் தாக்கங்கள் போன்றவற்ரின் காரணமாக 2030ஆம் ஆண்டுக்குள், உலகெங்கிலும் சுமார் 560 பேரிடர்கள் உருவாகும் இதனால் உலகளவில் சுமார் 37.6 மில்லியன் மக்கள் தீவிர வறுமையில் தள்ளப்படுவார்கள் என்று ஐக்கிய நாடுகளின் அனர்த்த முகாமைத்துவ அலுவலகம் தெரிவித்துள்ளது
பேரிடர் அபாயக் குறைப்புக்கான உலகளாவிய கலாசாரத்தை உருவாக்குவதற்காக, ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் 13 ஆம் திகதி சர்வதேச பேரிடர் அபாயக் குறைப்பு தினத்தைக் கடைப்பிடிக்கிறது.
ஒற்றுமையின் மூலம் மட்டுமே உலகைப் பாதுகாப்பானதாக மாற்ற முடியும் என்பதே சர்வதேச பேரிடர் அபாயக் குறைப்பு தினத்தின் கருப்பொருளாகும்.