2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம், தொழிலாளர் அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோவால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பானது, வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை உள்ளடக்கிய ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட உரையில் நவம்பர் 7 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
வரவு செலவுத் திட்டம் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் நவம்பர் 8 முதல் நவம்பர் 14 வரை 6 நாட்களுக்கு நடைபெறவுள்ளதுடன், இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு அன்று மாலை 6:00 மணிக்கு நடைபெறும்.
வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு அல்லது குழுநிலை விவாதம் நவம்பர் 15 முதல் டிசம்பர் 5 ஆம் திகதி வரை 17 நாட்களுக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், வரவு செலவுத் திட்ட மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 5 ஆம் திகதி மாலை 6:00 மணிக்கு நடைபெறும் என்றும் பாராளுமன்றம் தெரிவித்துள்ளது.