2025 ஆம் ஆண்டு இதுவரையில் 17 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களும், 5 கத்திக்குத்து சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
மேற்கு ,தெற்கு மாகாணங்கள் அதிக குற்றங்கள் நிகழும் மாகாணங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அந்த மாகாணங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கொழும்பிலுள்ள தகவல் ஊடக அமைச்சில் இன்று சனிக்கிழமை (22) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். அவர் மெலும் தெரிவிக்கையில்,
ஒழுங்கமைக்கப்பட்ட 57 குற்றக் குழுக்களும், அவற்றுக்கு சுமார் 1,400 பேர் உதவியாளர்களாக செயற்படுவதாகவும் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு நடத்தப்பட்ட விசாரணைகளில், 13, T56 ரக துப்பாக்கிகள், 15 ரிவால்வர்கள், 21 கைத்துப்பாக்கிகள், 75, 12-போர் துப்பாக்கிகள், 7 ரிப்பீட்டர்கள், 805 உள்ளூர் துப்பாக்கிகள் மற்றும் பிற துப்ன என்று அவர் தெரிவித்தார்.