2025 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் பெப்ரவரி 7 வரை இடம்பெற்ற வீதி விபத்துகளில் 203 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் நெடுஞ்சாலைகள் பணிப்பாளர் மனோஜ் ரணகல தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
2024 ஆம் ஆண்டில், கவனயீனமாக வாகனம் செலுத்தியதால் 1,585 வீதி விபத்துகள் நடைபெற்றன. நிலையில் 1,667 பேர் உயிரிழந்திருந்தனர்.
2025 ஜனவரி முதலாம் திகதி முதல் பெப்ரவரி 7 ஆம் திகதி வரை 194 கோர வீதி விபத்துக்களும் 514 கடுமையான வீதி விபத்துக்களும் , 880 சிறியளவிலான வீதி விபத்துக்களும் நடைபெற்றன.
இந்த விபத்துக்கள் அனைத்தும் 2025 பெப்ரவரி மாதம் 07 ஆம் திகதி வரை பதிவாகியுள்ளன. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 203 என பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் நெடுஞ்சாலைகள் பணிப்பாளர் மனோஜ் ரணகல தெரிவித்தார்.
Trending
- பாலஸ்தீன தடைக்கு எதிரான போராட்டங்களில் 70க்கும் மேற்பட்டோர் இலண்டனில் கைது
- விம்பிள்டன் சம்பியனானார் இகா ஸ்வியாடெக்
- அம்பாந்தோட்டை பறவை பூங்காவில் 21 சட்டவிரோத மோட்டார் சைக்கிள்களும், கஞ்சாவும் பறிமுதல்
- நெடுந்தீவுக்கு சுற்றுலா சென்ற படகு மூழ்கியது மயிரிழையில் உயிர் தப்பினர் பயணிகள்
- இனங்களுக்கிடையே சம உரிமைகளை உறுதி செய்ய கோரி கையெழுத்து போராட்டம்
- ஜனாதிபதி மாளிகையை பார்வையிட பாடசாலைகளுக்கு வாய்ப்பு
- ஒரு வருடத்தின் பின்னர் மீண்டும் வீனஸ் வில்லியம்ஸ்
- ஜானிக் சின்னரிடம் நோவக் ஜோகோவிச் தோல்வி