பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கு முன்பு இலங்கை 2019 இல் எப்படி இருந்ததோ அதே நிலைக்கு அடுத்த ஆண்டு திரும்பக்கூடிய வாய்ப்புள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 80ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொண்ட பின்னர் அமெரிக்காவில் வசிக்கும் இலங்கையர்களை நியூயோர்க்கில் சந்தித்த போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாக வங்குரோத்து நாடாக மாறிய இலங்கை இன்று அந்த நெருக்கடியை விரைவாக தீர்த்து வைத்த நாடாக மாறியுள்ளது என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
பொருளாதார நெருக்கடியில் மூழ்கியிருந்த நாட்டை நாம் தற்போது படிப்படியாக மீட்டு வருகிறோம்.
ஒரு நாட்டின் பொருளாதாரம் சரிந்தால் அந்த நாடு அதன் முந்தைய நிலைக்குத் திரும்ப 10 ஆண்டுகள் ஆகும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் 2019 இல் இருந்த பொருளாதாரத்தை அடுத்தாண்டு நாம் அடைய முடியும் என நினைக்கிறோம் என ஜனாதிபதி அநுரகுமர திசநாயக்க தெரிவித்துள்ளார்.