அமெரிக்கத் தலைமையிலான படைகளினால் ஆப்கானிஸ்தானில் கைது செய்யப்பட்ட 57 வயதான கான் முகமது விடுதலை செய்யப்பட்டு வீடு திரும்பி உள்ளார். அமெரிக்க தடுப்பு மையங்களில் சிறைவாசம் அனுபவித்த லட்சக்கணக்கான ஆப்கானியர்களைப் கான் முகமதுவும் பல ஆண்டுகளாக சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த கசப்பான நினைவுகளைச் சுமந்து செல்கிறார்.
“நான் கைது செய்யப்பட்டபோது என் குழந்தைகள் சிறியவர்களாக இருந்தனர். நான் விடுதலையாகி வீடு திரும்பிய பிறகு, மூத்தவர் முதல் இளையவர் வரை ஒவ்வொருவராக தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளும் வரை அவர்களில் யாரையும் என்னால் அடையாளம் காண முடியவில்லை,” என்று 10 பேர் கொண்ட குடும்பத்தின் தலைவரான கான், கூறினார்.
ஹாதியா கில் என்ற தொலைதூர கிராமத்தில் தரிசு மற்றும் பாழடைந்த தோட்டத்திற்கு மத்தியில் மண் செங்கல் வீட்டில் வசித்து வந்த முன்னாள் கைதி, தற்போது சுதந்திரக் க்சாற்றை சுவாசிக்கிறார்.
ஜலாலாபாத் விமான நிலையத்தைத் தாக்கி பல அமெரிக்கர்களைக் கொல்ல ஒரு பெரிய சதித்திட்டத்தை திட்டமிட்டதாக கான் மீது குற்றம் சாட்டப்பட்டது. 2006 ஆம் ஆண்டு நங்கர்ஹார் மாகாண தலைநகரான ஜலாலாபாத்தில் இருந்து அமெரிக்க துருப்புக்களால் கைது செய்யப்பட்ட அவருக்கு அமெரிக்காவில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
ஜனவரி மாதம், அமெரிக்காவிற்கும் ஆப்கானிஸ்தான் இடைக்கால அரசாங்கத்திற்கும் இடையிலான கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக அவர் விடுவிக்கப்பட்டு வீடு திரும்பினார்.
Trending
- அம்பாந்தோட்டை பறவை பூங்காவில் 21 சட்டவிரோத மோட்டார் சைக்கிள்களும், கஞ்சாவும் பறிமுதல்
- நெடுந்தீவுக்கு சுற்றுலா சென்ற படகு மூழ்கியது மயிரிழையில் உயிர் தப்பினர் பயணிகள்
- இனங்களுக்கிடையே சம உரிமைகளை உறுதி செய்ய கோரி கையெழுத்து போராட்டம்
- ஜனாதிபதி மாளிகையை பார்வையிட பாடசாலைகளுக்கு வாய்ப்பு
- ஒரு வருடத்தின் பின்னர் மீண்டும் வீனஸ் வில்லியம்ஸ்
- ஜானிக் சின்னரிடம் நோவக் ஜோகோவிச் தோல்வி
- 1,300க்கும் மேற்பட்டோரை பணி நீக்கம் செய்த ட்ரம்ப்
- இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக எரிக் மேயர்!