பதுளையில் வசித்து வரும் ஜீவநேசன் காஞ்சனா தம்பதிகளின் மகன் 2 வயதும் 11 மாதங்களுமேயான மிர்திக் தேவ் என்பவர் ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரம் பெற்ற 195 நாடுகளின் அமைவிடத்தை 10 நிமிடங்களில் அடையாளம் காட்டி உலக சாதனைப் புத்தகத்தில் தனது பெயரைப் பதிவு செய்தார்.
இதற்கான நிகழ்வு நேற்று (16) ஹாலிஎல ஹெவன்ஸ் ஹொட்டலில் சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் இலங்கைக் கிளையின் துணைத் தலைவர் ஸ்ரீ நாகவானி ராஜா முன்னிலையில் நடைபெற்றது.
குழந்தையின் இச் சாதனை நிகழ்வை கூர்மையாக கண்காணித்த நடுவர், குழந்தையின் முயற்சியை உலக சாதனையாக உறுதி செய்தார்.
சோழன் உலக சாதனை படைத்த மிர்திக் தேவிற்கு சட்டகம் செய்யப்பட்ட சான்றிதழ், பதக்கம், அடையாள அட்டை, நினைவுக் கேடயம் மற்றும் பைல் போன்றவை வழங்கிப் பாராட்டப்பட்டது.
ஊவா மாகாண பிரதி கல்வி பணிப்பாளர் திரு.நடராஜ் வெங்கடேஸ்வரன், ஊவா மாகாண ஆசிரிய ஆலோசகர்கள்,அதிபர்கள்,ஆசிரியர்கள் என பலரும் இந்த நிகழ்வில் பங்குகொண்டார்.
சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்துடன் இணைந்து பீபில்ஸ் ஹெல்பிங் ,பீபில்ஸ் பவுண்டேஷன் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்து நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

